கம்பராமாயணம் 5902 · சுந்தர 13.98

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்
அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஓர்
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.

பொருள் · Meaning in Tamil

சீரியோர்- அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்: பொருளும் காமமும் என்று இவை போக்க - செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு ஆம் என எண்ணலர்- வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று நினையார்; ஈதலும், அருளும் - வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும் கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது - அப்பொருளினிடத்தும் சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்; ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் - வேறு ஒரு நல்லறிவு உள்ளது என்று நினையார்.

பொருளும் காமமும்இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும் தெளிவு தருவன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wealth and lust, apart from these the noble
  2. do not think there is any other darkness; giving,
  3. grace, and freedom from craving, apart from these
  4. the noble do not think there is any other clear wisdom.

What the poem says

A general maxim: for the truly good, greed for wealth and the craving of lust are the only darkness in the world, and giving to the needy, compassion for all, and letting go of attachment are the only true clarity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poruḷum kāmamum eṉṟu ivai pōkka vēṟu
iruḷ uṇṭām eṉa eṇṇalar; ītalum
aruḷum kātaliṉ tīrtalum allatu ōr
teruḷ uṇṭām eṉa eṇṇalar cīriyōr.