கம்பராமாயணம் 5903 · சுந்தர 13.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இச்சைத்தன்மையினில் - ஆசையின் இயல்பினால், பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற - அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர்தன்னை இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து - வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு (காமதாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூஉம் கொச்சை ஆண்மையும் - பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ ? - சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா ? (சேராது என்றபடி).
பிறன் மனைநயத்தலின் இழிவு கூறப்பட்டது. “எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்ற குறளின் (145) கருத்தை அடியொற்றியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Out of mere desire, craving another man's wife,
- so that every day others laugh at him, the shameless one
- whose fresh body withers and who falls into blame:
- can such base manhood ever be counted among virtues?
What the poem says
Aṉumaṉ turns to the shame of coveting another man's wife. The man who does so is mocked daily, has no sense of shame, wastes away with lust and earns lasting disgrace; such manhood can never be called noble. The thought follows a couplet of the Tirukkuṟaḷ (145): the man who trespasses on another's home thinking it easy wins a blame that never dies.