கம்பராமாயணம் 5906 · சுந்தர 13.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாரை ஞூறுவ பற்பலபொன் புயம் - உலகங்களை அழிக்கவல்ல மிகப்பல அழகிய கைகளும்; ஈர் ஐஞ்ஞூறு தலை உள என்னினும் - ஆயிரம் தலைகள் உனக்கு உள்ளன என்றாலும்; அவை சேமம் செலுத்துமோ - அவை, உன்னைப் பாதுகாக்க வல்லனவோ ? (வல்லனஅல்ல); அவை - (ஆனால்) அவைதாம்; ஊரை ஞூறும் கடும் கனல் உள் பொதி நூறு சீரை - ஊர் முழுவதையும் அழிப்பதாய் வளர்ந்த கொடிய நெருப்பின் உள்ளே அகப்பட்ட நூறு சீலைகளே போலும்.
ஆயிரம் தலைகளும்பல கைகளும் உண்டானாலும் அவை உன்னைப் பாதுகாக்கமாட்டா; அவை யாவும், நெருப்பில் பட்ட சீலைப் பொதி போல இராமபிரானது அம்பினால் எளிதில்அழிந்து விடும் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You have many golden arms that can crush the world,
- and ten hundred heads; even so,
- like a hundred cloths bundled inside a fierce fire that consumes a city,
- will they keep you safe?
What the poem says
However many arms and heads Irāvaṇaṉ has, they cannot protect him. Before Irāmaṉ's arrows they will be destroyed as easily as a bundle of cloth thrown into a fire that is burning down a whole town.