கம்பராமாயணம் 5908 · சுந்தர 13.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன்னும் நகை ஆம்- (மற்றும்) பிறர் சிரித்தற்கு, வினைத் தொழில் - இடமான பல தொழில்களை; தேறினார் பலர் - செய்தலில் தேறியவர்; காமிக்கும் செவ்வியோய் - பலராலும் விரும்பப்படும் சமயத்தை உடையவனே !; ஈறு இல் நாண் உக - அழிவின்றிக் காக்கத்தக்க நாணம் கெடும்படி; எஞ்சல் இல் நல் திரு நூறி - குறைவற்ற (உனது) அரச செல்வத்தையும் அழித்துக் கொண்டு; நொய்தினை ஆகி வேறும் நுழைதியோ - சிறுமைக்குணம் உள்ளவனாய் (நீதி வழிக்கு) வேறுபட்ட இடுக்கு வழியான தீய நெறியில் செல்வையோ ?
தீயதொழிலில்தேறியவர்க்கு, காட்சிக்கு எளியவன் இராவணன் என்பதும், அவன் பிறன்மனை விழைதலாகிய தீய இடுக்கு வழியில் செல்லும் சிறுமைக் குணத்தினன் என்பதும் உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Destroying the shame that should be guarded without end, and your flawless fortune,
- will you grow small and slip in by another way?
- Yet more acts that move laughter,
- many skilled in them find a welcome with you, you whose favour they seek!
What the poem says
Aṉumaṉ scorns Irāvaṇaṉ: he is easily reached by people practised in shameful deeds, and he is throwing away his honour and his royal fortune to creep, like a petty man, down the narrow crooked path of coveting another's wife.