கம்பராமாயணம் 5913 · சுந்தர 13.109

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காட்டு வார்இன்மையால் - உன்னை எனக்குக்காட்டுபவர் எவரும் இங்கு இல்லாமையால், கடிகாவினை வாட்டினேன் - உன் காவல் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன் - (என் கருத்தை அறியாமல்) என்னைக் கொல்ல வந்த அரக்கர்களை அழித்தேன்; பின்னும் - அதன் பின்பும்; மென்மையினால் உன் தன் மாட்டு வந்தது - எளிமைப் பாட்டோடு உன்னிடத்து நான் வந்தது; காணும் மதியினால் - உன்னைக் கண்டு செய்தி கூற வேண்டும் என்ற எண்ணத்தால் (ஆகும்.

“மென்மையினால்உன் தன் மாட்டு வந்தது '- என்பது, “என்னைக் கட்டும் திறம் நாக பாசத்துக்கு இல்லை” என்ற அனுமனது கருத்தைக் குறிப்பிக்கின்றது. கடிகா - நறுமணம் உள்ள சோலை என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Since there was no one to show me the way to you, I laid waste
  2. your guarded grove; those who came to kill me
  3. I destroyed; and then, meekly, I came
  4. into your presence, minded to see you.'

What the poem says

Aṉumaṉ explains calmly: with no one to bring him to the king, he wrecked the guarded grove to draw attention, and he killed only those who came to kill him. Then he let himself be brought here quietly, because he wanted to see Irāvaṇaṉ and deliver his message.

'Meekly' hints that the binding weapon could not really have held him; he came of his own will.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kāṭṭuvār iṉmaiyāl kaṭi kāviṉai
vāṭṭiṉēṉ; eṉṉaik kolla vantārkaḷai
vīṭṭiṉēṉ; piṉṉum meṉmaiyiṉāl uṉtaṉ
māṭṭu vantatu kāṇum matiyiṉāl.