கம்பராமாயணம் 5914 · சுந்தர 13.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னும்மாத்திரத்து - (இவ்வாறு அனுமன்அஞ்சாமலும் அலட்சியமாகவும்) சொன்ன அளவில்; ஈண்டு எரி நீண்டு உக - நிறைந்த நெருப்பு நெடுந்தூரம் போய்ச்சிந்த, மின்னும் வாள் எயிற்றன் - ஒளி விடும் வாள் போலும் கோரப் பற்களை உடைய இராவணன்; சினம் வீங்கினான் கொல்மின் என்றனன் - சீற்றம் மிக்கவனாய் இந்தக் குரங்கைக் கொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; கொல்லியர் சேர்தலும் - கொலையாளிகள் அனுமனை அடைதலும்; நீதியான் வீடணன் நில்மின் என்றனன் - நீதி நெறியில் நடப்பவனான வீடணன் 'நில்லுங்கள்' என்று சொல்லிக் கொலையாளியைத் தடுத்தான்.
அனுமனதுஅஞ்சாமையும் அலட்சியப் பேச்சும், இராவணனது சீற்றப் பெருக்கத்துக்குக் காரணமாயிற்று எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At these words, his flashing sword-like fangs
- shedding long tongues of fire, he swelled with rage
- and said, 'Kill him!' As the killers drew near,
- Vīṭaṇaṉ, the just, said, 'Stop!'
What the poem says
Aṉumaṉ's fearless and offhand reply drives Irāvaṇaṉ into a fury; fire seems to spill from his gleaming teeth and he orders the monkey killed. As the executioners approach, his righteous younger brother Vīṭaṇaṉ halts them.