கம்பராமாயணம் 5915 · சுந்தர 13.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்டு எழுந்துநின்று - (வீடணன்) அப்பொழுது அச்சபையில் எழுந்து நின்று கொண்டு; அண்ணல் அரக்கனை - பெருமை தங்கிய அரக்கனான இராவணனை; நீண்ட கையன் வணங்கினன் - நீண்ட தன் கைகளைக் கூப்பி வணங்கியவனாய், மூண்ட கோபம் முறையது அன்று என - 'நீதி நெறி வழுவாதவனே ! இப்பொழுது மிகுதியாகக் கொண்ட கோபம் நீதி முறைமை உடையதன்று என்று; வேண்டும் மெய் உரை - யாவரும் விரும்பத்தக்க உண்மை வார்த்தைகளை; பைய விளம்பினான் - (அவன் கோபம் அடங்கும்படி) அமைதியாகக் கூறினான்.
இதில், 'மூண்டகோபம் முறையது அன்று” என்று வீடணனால் தொகுத்துச் சுட்டப்பட்டது, அடுத்த ஐந்து கவிதைகளில் வகுத்துக் காட்டப்படுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, rising and standing, the long-armed one
- bowed to the great demon, and saying, 'You who are just,
- this rage that has flared is not right,'
- he spoke gently the true words that were needed.
What the poem says
Vīṭaṇaṉ rises in the assembly, bows with joined hands to his brother, and quietly tells him that his anger is not just. His point, stated here in brief, is developed over the next five verses.