கம்பராமாயணம் 5916 · சுந்தர 13.112

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவம் நெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ, இயம்பு'தூது
வந்தனென்'என்ற பின்னும் கோறியே? மறைகள் வல்லோய்

பொருள் · Meaning in Tamil

(அறிவு ஆற்றல்களில்) தகுதி உடையவனே !; மறைகள் வல்லோய் ! - வேதங்களில் வல்லவனே ! ஆதியின் உலகம் மூன்றும் அறத்தின் தந்தவன் அந்தணன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்து - ஆதி காலத்தில் மூவகை உலகங்களையும் தருமத்தின் பலங் கொண்டு படைத்தவனான பிரமனது அன்புக்கு அமைந்த தவவழியை அறிந்து, (செய்து முடித்து வரம் பெற்று): இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ- தேவேந்திரனது திரிலோக ஆட்சியைக் கைப்பற்றி ஆளவல்ல பேரரசன் நீ (அப்படியிருந்தும்); இயம்பு தூது வந்தனென் என்ற பின்னும் கோறியோ - “ஒருவன் கூறியதைச் சொல்லும் தூதனாக இங்கு வந்தேன்” என்று சொன்ன பிறகும் (அவனைக்) கொல்லுகின்றாயோ ?

இராவணனதுபெருமையை எடுத்துக் காட்டி, 'தூதுவனைக் கொல்வது தக்கதன்று' என்று வீடணன் கூறினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing the path of penance that won the love of the Brahmin who,
  2. in the beginning, brought forth the three worlds by the power of dharma, worthy one,
  3. you became the lord who does Intiraṉ's work; and after he has said, I came
  4. as an envoy to speak, will you kill him, you who are master of the Vedas?

What the poem says

Vīṭaṇaṉ reminds Irāvaṇaṉ of his greatness: by austerities that pleased Piramaṉ, creator of the three worlds, he won boons and took over Intiraṉ's rule of the worlds, and he is learned in the Vedas. Is such a king to kill a messenger who has openly said he came as an envoy?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antaṇaṉ ulakam mūṉṟum ātiyiṉ aṟattiṉ āṟṟal
tantavaṉ aṉpukku āṉṟa tava neṟi uṇarntu, takkōy!
intiraṉ karumam āṟṟum iṟaivaṉ nī, iyampu'tūtu
vantaṉeṉ'eṉṟa piṉṉum kōṟiyō? maṟaikaḷ vallōy