கம்பராமாயணம் 5917 · சுந்தர 13.113

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூதலப் பரப்பின்- இப்பூமிப் பரப்பிடத்தும்; அண்டப் பொகுட்டினுள்- அண்ட கோளத்தின் உள்ளிடத்தும்,; புறத்துள் - உள்ளிடத்தும், அதன்புறமாகிய பகிரண்டத்திடத்தும்; பொய் தீர் வேதம் உற்று இயங்கு வைப்பின்- பொய்ம்மையில்லாத(சத்தியமான) வேதநெறிபொருந்தி வழங்கிவரும் உலகங்களில், வேறு வேறு இடத்து வேந்தர் - வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களில்; மாதரைக் கொலை செய்தார்கள் உளர் எனவரினும் - மகளிரைக் கொலை செய்தவர்கள் உள்ளார் என்று சொல்லப்படுமானாலும்; தொல்லை நல்லோர்- பழமையான நீதிமான்கள்; வந்த தூதரைக் கொன்று உளார்கள் யாவர் - தம்மிடத்தில் பிறர் அனுப்ப வந்த தூதரைக் கொன்றுள்ளவர் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்);

பாவங்களுள் பெண்கொலை கொடிது; அதனினும் கொடிது தூதுவனைக் கொல்லுதல் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Across the wide earth, within the shell of the cosmic egg and beyond it,
  2. in all the worlds where the Veda free of falsehood holds sway,
  3. even if it is said there were kings in this place or that
  4. who killed women, which of the good men of old ever killed envoys who came to them?

What the poem says

Vīṭaṇaṉ argues from precedent: in all the worlds governed by the Vedas, some kings may have killed women, but no righteous king of old has ever killed an envoy. Killing a woman is a grave sin; killing a messenger is graver still.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūtalap parappiṉ, aṇṭap pokuṭṭiṉuḷ, puṟattuḷ, poytīr
vētam uṟṟu iyaṅku vaippiṉ, vēṟu vēṟu iṭattu vēntar,
mātaraik kolai ceytārkaḷ uḷar eṉa variṉum, vanta
tūtaraik koṉṟuḷārkaḷ yāvarē? tollai nallōr.