கம்பராமாயணம் 5918 · சுந்தர 13.114

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பகைப்புலன் அணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார்
மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலம் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது உண்டாமோ? நம் குலம் நவை உண்டாமே?

பொருள் · Meaning in Tamil

பகைப்புலன் நணுகி- பகைவர்களுடைய இடத்தை அச்சமில்லாது சேர்ந்து; உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து - தம்மை அனுப்பியவர் சொல்லிய செய்தியை உள்ளபடியே சொல்லி; பற்றார் மிகை புலன் அடக்கி - பகைவர் கொள்ளும் கோப உணர்ச்சியைத் தமது சொல்லாற்றலால் அடக்கி; மெய்ம்மை விளம்புதல்- உண்மையான சொல்லைச் சொல்லுதலையே, விரதம் பூண்ட தகைப்புலம் கருமத் தோரை - தமக்கு விரதமாகக் கொண்ட சீரிய அறிவையும் செய்கையும் உடைய தூதுவரை; கோறலின் - நீ கொல்லுதலினால், தக்கார் யார்க்கும் நகைப்புலன் உண்டாமே - அறிவினாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த மேலோர் யாவர்க்கும் இகழ்ந்து சிரிப்பதற்கு இடம் உண்டாகுமே !; பிறிது நம் குலம் நவை உண்டாமே - மற்றும், நம் குலத்துக்குக் குற்றம் உண்டாகுமே!;

ஏகாரம் இரண்டும்தேற்றம். தூதர் தன்மைகளும் செயல்களும் நன்கு விளக்கப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who approach the enemy's land, speak what their senders spoke,
  2. subdue the swelling anger of foes, and are sworn
  3. to speak the truth, men of worthy mind and deed:
  4. if you kill such, will not all the wise have cause to laugh? Will not our race incur reproach?

What the poem says

Vīṭaṇaṉ describes the true envoy: one who enters hostile ground without fear, delivers his master's words exactly, calms the enemy's anger with his speech, and is vowed to truth. To kill such a man would make Irāvaṇaṉ a laughing stock among the wise and bring disgrace on the whole demon race.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pakaippulaṉ naṇuki, uyttār pakarntatu pakarntu, paṟṟār
mikaippulaṉ aṭakki, meymmai viḷamputal viratam pūṇṭa
takaippulam karumattōraik kōṟaliṉ, takkār yārkkum
nakaippulaṉ piṟitu uṇṭāmō? nam kulam navai uṇṭāmē?