கம்பராமாயணம் 5920 · சுந்தர 13.116

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இளையவள் தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து,
'விளைவு உரை'என்று விட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார்,
களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி;' என்று அமையச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

வீரர் ஆய்மெய்ம்மை ஓர்வார்- சுத்த வீரர்களாய் உண்மை நீதியை உணர்ந்த இராம இலக்குவர்கள்; இளையவள் தன்னைக் கொல்லாது - (தம்மிடம் வந்து தகாத முறையில் நடந்த) நம் தங்கை சூர்ப்பனகையைக் கொல்லாமல்; இரு செவி மூக்கொடு ஈர்ந்து விளைவு உரை என்று விட்டார் - இரண்டு காதுகளையும் மூக்கையும் அறுத்து, “இவ்விடத்துச் செய்தியை (உன்தமையனிடம் சென்று) சொல்' என்று உயிரோடு அனுப்பி விட்டார்கள்; ஆவிகளைதியேல்- (அவ்வாறிருக்க) நீ இந்தத் தூதனுடைய உயிரைப் போக்குவாயானால், நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட அளவு உரையாமல் செய்தி ஆதி - நம்மிடத்தில் “இவன் வந்து, தனது கண்ணால் கண்ட செய்தி அளவை (அவர்களிடம் சென்று அவர்களுக்கு) உரையாதபடி செய்தனை ஆவாய்; என்று அமைய சொன்னான் - என்று (இராவணன் மனதில்) பதியும் வண்ணம் (வீடணன் கூறினான்.

அனுமனைக்கொல்லாது விடுவதற்கு, சூர்ப்பணகை கொல்லப்படாமல் விடப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கூறி, வீடணன் தனது நீதி உரையை அமைய (பொருந்த) முடித்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Our younger sister they did not kill; cutting off her two ears and nose,
  2. they let her go, saying, Tell what has happened, those heroes who hold to truth.
  3. If you take his life, you will have made sure that what he came and saw among us
  4. with his own eyes is never told,' he said, fittingly.

What the poem says

Vīṭaṇaṉ's closing argument draws a parallel. Irāmaṉ and Ilakkuvaṉ, true heroes, did not kill their sister Cūrppaṇakai when she misbehaved; they maimed her and sent her home to report. If Irāvaṇaṉ kills this envoy, no account of Laṅkā will ever reach his masters. The parallel rounds off his counsel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iḷaiyavaḷ taṉṉaik kollātu, iru cevi mūkkoṭu īrntu,
'viḷaivu urai'eṉṟu viṭṭār vīrar āy meymmai ōrvār,
kaḷaitiyēl āvi, nampāl ivaṉ vantu kaṇṇiṉ kaṇṭa
aḷavu uraiyāmal ceyti āti;' eṉṟu amaiyac coṉṉāṉ.