கம்பராமாயணம் 5921 · சுந்தர 13.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நம்பி ! நல்லதுஉரைத்தாய் - (வீடணன் கூறியதைக்கேட்ட இராவணன், அவனை நோக்கி) உத்தமனே ! நீ நல்ல செய்தியை எடுத்துக் கூறினாய்; இவன் நவையே செய்தான்; ஆனாலும் கொல்லல் பழுதே - இந்த வானரன், குற்றமே செய்தவன்; ஆனாலும்,(இவனை நாம்) கொல்வது குற்றமேயாகும்; (என்று கூறி விட்டு, பிறகு அனுமனை நோக்கி); போய் கூறி அவரை கொணர்தி கடிது என்னா - “நீ சென்றுஅவர்களிடம் எனது நோக்கத்தைச் சொல்லி அவர்களை விரைவில் இங்கு போருக்கு அழைத்து வருவாய் என்று சொல்லி, (பிறகு அங்கிருந்த அரக்கர்களை நோக்கி); தொல்லை வாலை - இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலை; மூலம் அற சுட்டு - அடியோடு அழியும்படி நெருப்பைக் கொண்டு எரித்து; நகரைச் சூழ் போக்கி எல்லை கடக்க விடு மின்கள் என்றான் - இவனை நம் நகரைச் சுற்றி இழுத்துச் சென்று, இந்த நகரின் எல்லையைக் கடந்து போம்படி துரத்திவிடுங்கள் என்று கட்டளையிட்டான்; நின்றார் இரைத்து எழுந்தார் - அருகே நின்ற அரக்கர்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.
இராவணன் வீடணனிடமும் அனுமனிடமும் அரக்கர்களிடமும் கூறியது அனைத்தும் தொகுத்துரைக்கப்பட்டது என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have spoken well, noble one! Though this one has done only wrong,
- killing him is a fault. Go, tell them, and bring them here quickly,' he said;
- 'Burn his troublesome tail down to its root, drag him round the city,
- and drive him past its bounds.' Those standing there rose with a roar.
What the poem says
Irāvaṇaṉ accepts his brother's advice: the monkey has done wrong, but killing an envoy would be a fault. He tells Aṉumaṉ to go and bring his masters to fight, and orders the demons to set fire to the monkey's tail, parade him round Ilaṅkai and drive him out. The demons rush forward with a shout.