கம்பராமாயணம் 5922 · சுந்தர 13.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆய காலத்துஅமரர் போர் வென்றான் - இவ்வாறு நிகழ்ந்த சமயத்தில், தேவர்களைப் போரில் வென்ற இந்திரசித்து; அயன் படையோடு இருப்ப அனல் இடுதல் ஆகாது - வானரம், பிரம்மாத்திரப் பிணிப்புடன் இருக்கும் போது, தீயிட்டு, அதனை எரித்தல் கூடாது, (அதனால்); தூய பாசம் என பலவும் கொணர்ந்து தோள் பிணிமின் - சிறந்த கயிறுகள் என்று சொல்லும் பலவற்றையும் கொண்டு வந்து, இதன் தோள்களை இறுகக் கட்டுங்கள்; என்னா மேய தெய்வப் படைக் கலத்தை மீட்டான் - என்று (அரக்கர்களிடம் சொல்லி) அனுமன் மீது, பாம்பு வடிவாய்ப் பொருந்தியிருந்த தெய்வத்தன்மையுள்ள பிரமாத்திரத்தைத் தோள்களினின்று விடுவித்தான்; ஏ எனா முன் - (அக்கட்டளைப்படியே) அரக்கர்கள் ஏய் என்று ஒரு முறைசொல்லும் காலஅளவுக்குள்; இடைபுக்கு தொடைவன் கயிற்றால் - அனுமனிடம் வந்து, ஒன்றோடு ஒன்று இணைத்த கயிறுகளால்; பிணித்து ஈர்த்தார் - அனுமனைக் கட்டி இழுக்கலானார்கள்.
பிணி வீட்டுப்படலத்திற்கு உயிர் நிலையாக அமைந்த இந்தப் பாடலால் பிரம்மாத்திரத்தின் தெய்வத் தூய்மையும் உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time, he who won the war with the gods said, 'It will not do to set fire while he is held by Ayaṉ's weapon;
- bring many strong ropes and bind his shoulders,'
- and withdrew the divine weapon that lay on him;
- before one could say 'Ah!' they rushed in, bound him with knotted ropes and dragged him.
What the poem says
Intiracittu, conqueror of the gods, realises that Aṉumaṉ cannot be set on fire while bound by the sacred weapon of Piramaṉ (Ayaṉ). He orders ordinary ropes brought and withdraws the divine weapon, which had lain on Aṉumaṉ like a serpent. In an instant the demons bind him with joined ropes and drag him off.
This is the pivotal moment of the chapter, whose name means 'release from bonds': the divine weapon will not tolerate being joined with common rope.