கம்பராமாயணம் 5923 · சுந்தர 13.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீட்டின் ஊசல்நெடும் பாசம் அற்ற - (அரக்கர்களால்கொண்டு போகப்பட்டதனால்) வீடுகளில் உள்ள ஊஞ்சல்கள் தம் நீண்டகயிறுகள் அற்றன; தேரும் விசி துறந்த - தேர்களும் கட்டுக் கயிறுகளை இழந்தன; மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த - பிணிக்கப்பட்ட குதிரைக் கூட்டம் எல்லாம், கட்டி வாங்கும் கயிறுகள் ஒழியப் பெற்றன; போர் யானை பூட்டு வல்லி மூட்டோடும் புரசை இழந்த - போர்த்திறம் அமைந்த யானைகள் முடிச்சுடன் இடும் காற்கயிறுகளும், கழுத்தில் கட்டப்படும் கயிறுகளும் இல்லையாயின (என்றால்); நாட்டின் நகரின் நடு உள்ள கயிறு - அந்த நாட்டுப் புறத்திலும் நகரத்திலும் உள்ளனவான வெறுங்கயிறுகள்; நவிலும் தகைமையவே - சொல்லும் தன்மையுடையன ஆகுமோ? (ஆகாது என்றபடி).
அனுமனைக் கட்ட, கொண்டு வந்த கயிறுகள் பல திறப்பட்டனவாகும். இலங்கையில் கயிறு என்று காணப்பட்ட அனைத்தும் கொண்டு வரப்பட்டன என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Could the ropes in the countryside and the city even be worth mentioning?
- The swings in the houses lost their long ropes; chariots gave up their cords;
- all the tethered herds of horses lost the ropes that held them;
- war elephants lost their knotted leg-ropes and their neck-ropes.
What the poem says
To bind Aṉumaṉ, the demons strip Ilaṅkai of every rope: swings, chariots, horses and war elephants are all left without their cords. Ordinary ropes from town and country hardly need mention. Every rope that could be found was brought.