கம்பராமாயணம் 5924 · சுந்தர 13.120

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்ணில் கண்ட - நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்; வானவரை வலியின் கவர்ந்த - தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக் கொண்டு வந்த பாசங்களும்; வரம் பெற்ற - வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்; எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த - எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக); கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு,கட்டினார் - தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தமக்கு இயைந்தபெண்ணிற்கு இசையும் - தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த; மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த - திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியிருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

அரக்கியர்களின்தாலிக்கயிறு தவிர ஏனைய கயிறுகள் எல்லாவற்றையும் கொண்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ropes found on the earth, those seized from the gods by force, those gained by boons,
  2. those wrested in battle from countless others: all the strong cords they saw
  3. they heaped on him and bound him; only the cords
  4. tied in the marriage symbols of the women joined to them escaped.

What the poem says

Every kind of rope is used, earthly ropes, nooses taken from the gods, divine nooses gained by boons, cords seized from countless foes. The only ropes spared are the sacred marriage threads worn by the demons' wives.

The touch is ironic: these wedding threads alone survive, though the fire that is coming will soon widow many of these women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇil kaṇṭa, vāṉavarai valiyiṉ kavarnta, varam peṟṟa,
eṇṇaṟku ariya ēṉaiyarai ikaliṉ paṟitta, tamakku iyainta
peṇṇiṟku icaiyum maṅkalattil piṇitta kayiṟē iṭai piḻaitta;
kaṇṇil kaṇṭa vaṉ pācam ellām iṭṭuk kaṭṭiṉār.