கம்பராமாயணம் 5925 · சுந்தர 13.121

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நவை அற்றான் - குற்றமற்றவனாகிய அனுமான்; கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே - தெய்வத்தன்மை உடையபிரம்மாத்திரத்தை மீறி, தருமநிலையைத் தவறினேனாகாதபடி; தெவ்வரேவிடுவித்து அளித்தார் - பகைவர்களாகிய அரக்கர்களே (என்னைப்பிரம்மாத்திரத்தினின்றும்) விடுவித்துஉதவினார்கள்; இவர் வென்றி வென்றேன் அன்றோ - இவர் இது வரை அடைந்திருந்த வெற்றியை நான் வென்று விட்டேன் அல்லனோ ?; சுடுவிக்கின்றது - இராவணன் என்னை (அரக்கர்களைக் கொண்டு) வால் கொளுத்துகின்ற முயற்சி; இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு - “இந்த ஊரை நீ எரிப்பாயாக' என்று எனக்குச் சொன்ன தெளி பொருளாகும்; என்று - என்று எண்ணி; நடு உற்று அமையம் உற நோக்கி - அரக்கர்களின் நடுவில் இருந்து கொண்டு (அவர்களிடத்தினின்று தான் அகல்வதற்குரிய) சமயத்தை எதிர்நோக்கி, முற்றும் உவந்தான் - நிரம்ப மகிழ்ச்சியுற்றான்.

அனுமனது வாலில்நெருப்பு வைக்குமாறு இராவணன் அரக்கர்களுக்கு இட்ட ஆணை, “இலங்கை நகரைச் சுடுவாய்' என்று தனக்கு இராவணன் அனுமதி கொடுத்ததாக எண்ணி அனுமான் மகிழ்ந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Lest I break the divine weapon and so transgress the command of dharma,
  2. my foes themselves have set me free; have I not conquered their conquest?
  3. This order to burn me is the firm word telling me, Burn this city,'
  4. thinking so, the faultless one, waiting in their midst for the moment, rejoiced wholly.

What the poem says

Aṉumaṉ is delighted. He would not break the holy weapon of Piramaṉ, since that would offend dharma, but the demons themselves have freed him from it. And Irāvaṇaṉ's order to set his tail alight he takes as a clear licence to burn the city. Surrounded by demons, he waits for his chance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kaṭavuḷ paṭaiyaik kaṭantu, aṟattiṉ āṇai kaṭantēṉ ākāmē,
viṭuvittu aḷittār tevvarē; veṉṟēṉ aṉṟō ivar veṉṟi;
cuṭuvikkiṉṟatu,'iv vūraic cuṭuka' eṉṟu uraitta tuṇivu"eṉṟu
naṭu uṟṟu amaiya uṟa nōkki, muṟṟum uvantāṉ navai aṟṟāṉ.