கம்பராமாயணம் 5926 · சுந்தர 13.122

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நொய்ய பாசம் புரம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி,
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும், அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான்.

பொருள் · Meaning in Tamil

நொய்ய பாசம்புறம் பிணிப்ப - வலிமையற்ற கயிறுகள்தனது உடலைக்கட்ட ; நோன்மை இலன் போல் உடல் நுணங்கி - (அதனை அறுக்கும்) ஆற்றல் அற்றவன் போன்று உடம்பு துவண்டு; வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப - கொடிய அரக்கர்கள் தன்னைச் சூழ்ந்து நின்று இழுத்து வருத்த,; வீடும் உணர்ந்தே - அப்பிணிப்பினின்றும் விடுவித்துக் கொள்ளும் வழியை அறிந்தவனாயிருந்தும்; விரைவு இல்லா ஐயன் - அதனைச் செயலாற்றுவதில் விரைவு காட்டாத அனுமன்; விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை என்னும் பொய்யை மெய் போல் நடிக்கின்ற - தத்துவ ஞானம் விளைக்கும் பிரம வித்தையை அறிந்திருந்தும், (அதனை) அறியாதவன் போல, அவித்தை என்கின்ற பொய்ப் பொருளை மெய்ப்பொருள் போல எண்ணிக் கொண்டு வெளிக்குக் காட்டி ஒழுகுகின்ற யோகியைஒத்தவனாய்; போகின்றான் - தன்னையிழுக்கின்ற அவர்களுடன் செல்வானாயினான்.

மெய்யுணர்வுஇல்லாத உலகத்தினருடன் ஒத்து நடந்து அவர் சென்ற வழிச் சென்று அவரை நல்வழிப்படுத்த முயல்வது தத்துவ ஞானியரான யோகியரின் இயல்பு. அது போன்று அரக்கர்களது பிணிப்புக்கு அடங்கி, அவர்கள் சென்ற வழி எல்லாம் அனுமன் சென்றான் என்க. அவிஞ்சை - அவித்தை; அஞ்ஞானம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While flimsy ropes bound him all round, his body sagging as if he had no strength,
  2. while the fierce demons dragged him about, the lord in no haste,
  3. though he knew the way to be free, was like a yogi who knows true knowledge yet acts as if he did not,
  4. playing out the falsehood called ignorance as if it were truth; and so he went.

What the poem says

Aṉumaṉ could snap the ropes at any moment, but he goes limp and lets himself be dragged. The poet likens him to a yogi who has realised the truth yet lives among ordinary people as though he shared their ignorance, following their ways in order to lead them right. So Aṉumaṉ submits and goes wherever the demons pull him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1noyya pācam puṟam piṇippa, nōṉmai ilaṉpōl uṭal nuṇaṅki,
veyya arakkar puṟattu alaippa, vīṭum uṇarntē, viraivu illā
aiyaṉ, viñcaitaṉai aṟintum, aṟiyātāṉ pōl, aviñcai eṉum
poyyai mey pōl naṭikkiṉṟa yōki pōṉṟāṉ; pōkiṉṟāṉ.