கம்பராமாயணம் 5927 · சுந்தர 13.123

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேந்தன்கோயில் வாயிலொடும் - (இவ்வாறாக அனுமனைக் கயிறுகள்கொண்டு கட்டி இழுத்துக் கொண்டே) இராவணனது அரண்மனை வாயிலை; விரைவில் கடந்து - விரைவாகக் கடந்து சென்று; வெள்ளிடையின் போந்து- வெட்ட வெளியை அடைந்து; புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர்மறவர் - அனுமனைச் சுற்றி எப்புறத்தும் நின்று ஆரவாரஞ் செய்கின்றபொறுமையில்லாத அந்த அரக்கவீரர்கள்; ஏந்து நெடுவால் புறம் சுற்ற - எடுக்கப்படுகின்ற நீண்ட (அனுமனது) வாலில் எப்புறமும் சூழும் படி; கிழிசுற்றி முற்றும் இழுது எண்ணெய் தோய்த்தார் - பலவகைச் சீலைகளைக்கொண்டு சுற்றி அவ்வால் முழுவதையும் நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து; காந்து கடுந்தீ கொளுத்தினார் - (அதில்) எரியும் கொடியநெருப்பைக் கொளுத்தி; அண்டம் கடிகலங்க ஆர்த்தார் - அண்ட கோளம்முழுவதும் நிலைகுலையும்படிப் பெருமுழக்கமிட்டார்கள். அனுமன் வாலில் அரக்கர் செய்த செயல் கூறப்பட்டது.

கிழி - சீலை; (துணி) இழுது - நெய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swiftly passing out through the gate of the king's palace and coming into the open,
  2. with the impatient warriors roaring all round him,
  3. they wrapped his long raised tail in cloth and soaked it all in ghee and oil,
  4. lit a scorching, fierce fire, and shouted till the cosmos shook.

What the poem says

The demons drag Aṉumaṉ out of Irāvaṇaṉ's palace into the open ground. Surrounded by a howling crowd, they wind rags round his long tail, soak it in ghee and oil, set it alight, and raise a roar that shakes the universe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēntaṉ kōyil vāyiloṭu viraivil kaṭantu, veḷḷiṭaiyiṉ
pōntu, puṟam niṉṟu iraikkiṉṟa poṟaitīr maṟavar puṟam cuṟṟa,
ēntu neṭuvāl kiḻi cuṟṟi, muṟṟum tōyttār iḻutu eṇṇey;
kāntu kaṭun tīk koḷuttiṉār, ārttār; aṇṭam kaṭikalaṅka.