கம்பராமாயணம் 5928 · சுந்தர 13.124

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒக்க ஒக்க உடன் விசித்த உலப்பு இலாத உர பாசம்,
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு ஆயிரவர் பற்றினார்;
புக்க படைஞர், புடை காப்போர், புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்
திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால

பொருள் · Meaning in Tamil

ஒக்க ஒக்க உடல்விசித்த - பல ஒன்று சேர்ந்த, அனுமனது உடலைக்கட்டிய, உலப்பு இலாத உரம் பாசம் - அழிவு இல்லாத வலிமை உடையகயிறுகளை; பக்கம் பக்கம் இரு கூறு ஆய் - இரு பக்கங்களிலும் இரண்டுபிரிவுகளாக; நூறு ஆயிரவர் பற்றினார் - நூறு ஆயிரம் (இலட்சம்) அரக்கர்கள் பிடித்துக் கொண்டார்கள்; புக்க புடை காப்போர் படைஞர்- அவர்களுடன் வந்த பக்கங்களிலிருந்து பாதுகாப்பவர்களாகிய ஆயுத பாணிகள்; புணரிக் கணக்கர் - சமுத்திரம் என்னும் தொகை அளவினர்; புறம்செல்வோர் திக்கின் அளவு - அவர்களின் பக்கங்களில் சூழ்ந்து வருபவர்கள், திக்குகளின் அளவு வரை உள்ளவர்; அயல் நின்று காண் போர்க்கு எல்லை தெரிவு அரிது - அதற்கும் அப்பால் நின்று வேடிக்கை காண வருபவர்க்கு அளவு அறிய ஒண்ணாதது.

அனுமனை இழுத்துச்செல்லும் போது அங்கு கூடிய அரக்கர்களின் தொகை, நான்கு வகையாகக் கூறப்பட்டது. புணரிக் கணக்கு இருபத்தாறு தானம் உடைய சமுத்திரம் என்ற எண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The countless strong ropes bound tightly all over his body
  2. were held on either side, in two parts, by a hundred thousand;
  3. the armed guards who came along at the flanks numbered a samudra; those who walked beside
  4. stretched to the ends of the directions; for those watching from beyond, no limit could be seen.

What the poem says

The procession is described in four widening rings: a hundred thousand demons hauling the ropes, armed guards whose number is a 'samudra', a vast figure of twenty-six places, a crowd stretching to the horizons, and beyond them onlookers past all counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1okka okka uṭal vicitta ulappu ilāta urap pācam,
pakkam pakkam iru kūṟu āy nūṟāyiravar paṟṟiṉār;
pukka paṭaiñar, puṭai kāppōr, puṇarik kaṇakkar; puṟam celvōr
tikkiṉ aḷavāl; ayal niṉṟu kāṇpōrkku ellai terivu aritāl.