கம்பராமாயணம் 5929 · சுந்தர 13.125

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்த நகரும்கடிகாவும் அழிவித்து - (இராவணனின்ஏவலர்கள்) இலங்கை நகரையும் காவல் மிகுந்த அசோகவனம் என்னும் சோலையையும் அழியச் செய்தும்; அக்கன் முதலாயோர் சிந்த நூறி - அக்ககுமாரன்முதலிய சிறந்த அரக்கர்களை சிதறி அழியக் கொன்றும்; சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப வந்த - சீதையுடன் தனியே பேசியும், அற்ப மனிதர்களது வலிமையைச் சொல்லவும் இராவணனிடத்து வந்த; குரங்கிற்கு உற்றதனை - இந்தக் குரங்குக்கு நேர்ந்த துன்ப நிலையை; காண வம்மின் வம் என்று - பார்ப்பதற்கு வாருங்கள் வாருங்கள் என்று; தம் தம் தெருவும் வாயில் தொறும் - தத்தம் வீதிகளிலும்வீட்டு வாயில்கள் எல்லாவற்றிலும்; யாரும் அறிய சாற்றினார் - அனைவரும் அறியும்படிக் கூறினார்கள். இராவணனுடையஏவலர்கள், குரங்குக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலையைக் காண வருமாறு அனைவரையும்அழைத்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who destroyed that city and the guarded grove, cut down Akkaṉ and the others
  2. so that they scattered, spoke with Cītai, and came to tell of the strength of men:
  3. come, come and see what has befallen this monkey!'
  4. so they proclaimed in every street and at every door for all to know.

What the poem says

Irāvaṇaṉ's servants go through the streets calling everyone to come and see the plight of the monkey who wrecked the city and the Asoka grove, killed Akkaṉ and other demon champions, spoke privately with Cītai, and came to boast of the humans' strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'anta nakarum kaṭi kāvum aḻivittu, akkaṉ mutalāyōr
cinta nūṟi, cītaiyoṭum pēci, maṉitar tiṟam ceppa,
vanta kuraṅkiṟku uṟṟataṉai, vammiṉ kāṇa vam'eṉṟu
tam tam teruvum vāyiltoṟum yārum aṟiyac cāṟṟiṉār.