கம்பராமாயணம் 5930 · சுந்தர 13.126

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்டத்துஅப்புறத்தும் அறிவிப்பார் போல் - (அரக்கர்கள்) இந்த அண்ட கோளத்துக்கு அப்பால் உள்ள இடங்களுக்கும் இச் செய்தியைத் தெரிவிப்பவர் போல; ஆர்த்தார் - பேரொலி எழுப்பி ஆரவாரித்தார்கள்; அங்கொடு இங்கு ஈர்த்தார் - அங்கும் இங்குமாக அனுமனைக் கட்டி இழுத்தார்கள்; முரசம் எற்றினார் - பேரிகைகளைத் தாக்கி அடித்து ஒலி எழுப்பினார்கள்; இடித்தார் - (சிலர்) இடிமுழக்கம் போலக் கர்ச்சித்தார்கள்; தெழித்தார் - (சிலர்) அனுமனை அதட்டினார்கள்; எம் மருங்கும் பார்த்தார் - (சிலர்) எப்புறமும் அனுமனைச் சுற்றிப் பார்த்தார்கள்; ஓடி சானகிக்கும் பகர்ந்தார் - (சிலர் ஓடிப் போய் அனுமனுக்கு உற்ற நிலையை, பிராட்டிக்கும் சொன்னார்கள்; அவளும் உயிர் பதைத்தாள்- (அது கேட்ட) பிராட்டியும் உயிர் துடித்தாள்; வேர்த்தாள் - உடல்வியர்த்தாள்; உலந்தாள்- (மனம்) அழிந்தாள்; விம்மினாள் - ஏக்கமுற்றாள்; விழுந்தாள் - நிலத்தில் சாய்ந்தாள்; அழுதாள் - வாய்விட்டு அழுதாள்; வெய்து உயிர்த்தாள் - வெப்பமாகப் பெருமூச்சு விட்டாள்.

அனுமனைக்கயிறுகளால் கட்டி இழுத்த அரக்கர்களது மகிழ்ச்சி ஆரவாரிப்பும், அது கேட்ட பிராட்டியின் சோக நிலையும் உரைக்கப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They roared as if to proclaim it beyond the cosmos; they dragged him here and there,
  2. beat the drums, thundered, threatened him, looked on from every side,
  3. and ran to tell Jāṉaki too; and she, her life trembling,
  4. sweated, wasted, sobbed, fell, wept, and sighed hot breaths.

What the poem says

The demons' noisy triumph is set against Cītai's anguish. They shout, drag Aṉumaṉ about, beat drums and jeer; some run to tell Cītai, here called Jāṉaki, daughter of Jaṉakaṉ. The string of verbs in the last line traces her distress: trembling, sweating, fainting, sobbing, falling, weeping, sighing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttār, aṇṭattu appuṟattum aṟivippār pōl; aṅkōṭu iṅku
īrttār, muracam eṟṟiṉār, iṭittār, teḻittār, em maruṅkum
pārttār, ōṭic cāṉakikkum pakarntār; avaḷum uyir pataittāḷ,
vērttāḷ, ulantāḷ, vimmiṉāḷ, viḻuntāḷ, aḻutāḷ, veytu uyirttāḷ