கம்பராமாயணம் 5931 · சுந்தர 13.127

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாயே அனைய கருணையான் துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன், எரியே அவனைச் சுடல்'என்றாள

பொருள் · Meaning in Tamil

எரியே - (பிராட்டிஅக்கினி தேவனை நினைத்து) ஏ! நெருப்புக் கடவுளே!; தாயே அனைய கருணையான் துணையை - (எல்லா உயிர்களிடத்தும்) தாய் போன்று அருள் புரியும் இராமபிரானுக்கு உயிர்த்துணைவனான அனுமனை: ஏதும் தகைவு இல்லா - சிறிதும் பெருமைக்குணம் இல்லாத; நாயே அனைய - நாய் போல இழிந்த; வல் அரக்கர் நலிய கண்டால் - கொடிய அரக்கர்கள் துன்புறுத்த நீ பார்த்தால்; நல்காயோ - அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?; நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே கற்பு தெரியும் - நீதான், உலகம் அனைத்துக்கும் ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன்; (ஆதலால்) உனக்கே எனது கற்பு நிலை தெரியும்; அதனில் தூயேன் என்னின் அவனை சுடல்- அந்தக் கற்புத் திறத்தில் நான் தூய்மை உடையவள் என்பது உண்மையானால், அந்த அனுமனை நீ சுடாதே; தொழுகின்றேன் - உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்; என்றாள் - என்று உறுதியிட்டுக் கூறினாள்.

பிராட்டிஅக்கினி தேவனிடம், அனுமனைச் சுட்டு வருத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டாள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you see the helper of the one whose compassion is like a mother's
  2. tormented by cruel demons, like dogs without any worth, will you not show grace?
  3. You alone are the one witness for the world; you alone know whether in chastity
  4. I am pure; if so, I worship you: Fire, do not burn him!' she said.

What the poem says

Cītai prays to Agni, the god of fire, who sees all and is witness to every deed. If she has kept herself pure, she says, let the fire not burn Aṉumaṉ, the companion of Irāmaṉ, whose love for all beings is like a mother's. The Tamil 'cuṭal' here is a negative command: 'do not burn'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāyē aṉaiya karuṇaiyāṉ tuṇaiyai, ētum takaivu illā
nāyē aṉaiya val arakkar naliyak kaṇṭāl, nalkāyō?
nīyē ulakukku oru cāṉṟu; niṟkē teriyum, kaṟpu ataṉil
tūyēṉ eṉṉiṉ toḻukiṉṟēṉ, eriyē avaṉaic cuṭal'eṉṟāḷ