கம்பராமாயணம் 5954 · சுந்தர 14.10

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொடித்து எழுந்துபோவன பெரும் பொறி - (நெருப்பினின்றும்) சிதறி எழுந்து போவனவாகிய பெரிய தீப்பொறிகள்: இடி குலங்களின் எங்கணும் வீழ்தலின் - இடிக்கூட்டம் போல எல்லா இடங்களிலும் வீழ்ந்த அளவில்; வெடித்த வேலை- வெடி ஓசை போன்ற ஓசையை உடைய கடல், வெதும்பிட மீன் குலம் துடித்து - கொதிப்படைய அக்கடலில் உள்ள மீன் கூட்டங்கள் (வெப்பம் தாங்காமல்) துடித்து; வெந்து, புலர்ந்து உயிர் சோர்ந்த- தாபமடைந்து வாடி, உயிர் ஒடுங்கி இறந்தன. நெருப்புப்பொறிகள் எல்லா இடங்களிலும்விழுந்ததனால், கடல் கொதித்தது; அதனால், அங்கிருந்த மீன்குலம் வெப்பம் தாங்காமல், துடிப்புண்டும் வெந்தும் காய்ந்தும் இறந்தன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great sparks that burst out and flew
  2. fell everywhere like masses of thunderbolts; the sea crackled
  3. and grew hot, and the shoals of fish
  4. writhed, were scalded, withered and gave up their lives.

What the poem says

Huge sparks shower everywhere like thunderbolts. The sea round Ilaṅkai seethes with a crackling sound, and its fish thrash about, cook and die in the heat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṭittu eḻuntu perum poṟi pōvaṉa
iṭik kulaṅkaḷiṉ vīḻtalil eṅkaṇum
veṭitta; vēlai vetumpiṭa mīṉkulam
tuṭittu ventu pularntu uyir cōrntavāl.