கம்பராமாயணம் 5955 · சுந்தர 14.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருகு தீ - (தன்னிடம் கிடைப்பன யாவற்றையும் பருகும் (அழிக்கும்) இயல்பினை உடைய நெருப்பு; மடுத்து - சூழ்ந்து நிறைந்து; உள் உற பற்றலால் - (பொன் மாளிகைகளின்) உள்ளே புகுந்து எரித்தலால்; உருகி அருகு நீடிய ஆடக தாரைகள் - உருகிப் பக்கங்களில் பெருகிய பொன்னின் ஒழுக்குகள்; வேலையின் ஊடுபுக்கு உற்றன - கடலின் அகத்தே புகுந்தவைகளாய், திருகு பொன் நெடும் தண்டின் திரண்ட - முறுக்குகள் அமைந்த நீண்ட பொற்பாளங்களாக இறுகின.
நெருப்பு, மடுத்துபொன்மாளிகையில் புகுந்து எரித்ததால், பொன் ஒழுக்கு, கடலின் நீரில் சேர்ந்து, மறுபடியும் இறுகி பாளங்களாக மாறிற்று. நெருப்பு சூட்டில் உருகிய பொன் தண்ணீரின் குளிர்ச்சியில் இறுகிற்று. தண்டு - கட்டிப்பட்ட பாளம்; திரள்தல். இறுகுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the drinking fire pressed in and seized them within,
- the streams of gold that ran out along their sides
- melted, entered the sea,
- and hardened into long twisted bars of gold.
What the poem says
The fire penetrates the golden mansions; their gold melts and flows in streams into the sea, where the cold water sets it again into long twisted ingots.