கம்பராமாயணம் 5963 · சுந்தர 14.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூ கரிந்து - மலர்கள்கரிந்து போய்; முறி பொறி ஆய் - இளந் தளிர்கள் நெருப்புப் பொறியாய்; அடை நாகரிந்து - இலைகளும், இலைகளின் நடுவில் உள்ள ஈர்க்குகளும் கரியாகி; சினை நறுஞ் சாம்பர் ஆய் மீகரிந்து - சிறு கிளைகள் நல்ல சாம்பலாய் வெந்து அதன் மேலுள்ள மற்றப் பாகங்களும் வெந்து; நெடும் பணை வேர் உற கா கரிந்து - நீண்ட கிளைகளும், வேர்களும் ஒன்றுபட சோலைகள் முழுவதும் கரிந்து போய், கரும் கரி ஆன - பெரிய கரிக்குவியல்களாக ஆயின.
முறி - இளந்தளிர்; அடை - இலை; நா இலையின் நடுவில் உள்ள ஈர்க்கு; சினை - சிறுகிளை; நெடும்பணை - பெரிய கிளை; கா- சோலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flowers were burned, the young shoots turned to sparks, the leaves
- and their midribs charred, the twigs became fragrant ash,
- the tops burned, and with the long branches and roots,
- the groves were burned to black charcoal.
What the poem says
A step-by-step picture of the groves burning: blossoms, tender shoots, leaves and their veins, twigs, crowns, great branches and roots, until each grove is reduced to a heap of black charcoal.