கம்பராமாயணம் 5964 · சுந்தர 14.20

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருக்கின;
தூர் ஒழுக்கம் அறாமையின் துன்னு பொன்
வேர் விழுப்பது போன்றன விண் எலாம்.

பொருள் · Meaning in Tamil

கார் முழுக்கஎழும் கனல் கற்றை - மேகங்களை முழுகச்செய்யும் படிமேலே எழுகின்ற நெருப்பின் தொகுதி; போய் ஊர் முழுக்க வெதுப்ப - மேற் சென்று, (பொன்மயமான) அமராவதி நகரம் முழுவதையும் சுட்டெரிக்க; உருகின சோர் பொன் ஒழுக்கம் அறாமையின் - (அதனால்) உருகிஒழுகுகின்ற பொன்னின் தாரைகள் இடைவிடாது பெருகுதலால், விண் எலாம்துன்று வேர் விடுப்பது போன்றன - அவ்வான நாடு முழுவதும், அடர்ந்தமரத்தின் வேரைக் கீழே இறங்க விடுவது போன்று விளங்கின. மேகங்கள்முழுகும்படி எழுந்த தீச்சுடர் பொன் மயமான அமராவதி நகரை எரிக்க, அது உருகியது. உருகிய பொன் ஒழுக்கு, மரத்தின் வேர்கள் போன்று விளங்கிற்று என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mass of fire rising to drown the clouds went up
  2. and scorched the whole city above, which melted;
  3. since the trickling streams never ceased, all the sky
  4. seemed to be sending down dense roots of gold.

What the poem says

The flames rise above the clouds and reach Amarāvati, the golden city of Intiraṉ in heaven, which melts in the heat. Streams of molten gold pour down without a break, so that the whole sky looks like a great tree letting down roots of gold.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kār muḻukka eḻum kaṉal kaṟṟai pōy
ūr muḻukka vetuppa urukiṉa;
cōr oḻukkam aṟāmaiyiṉ tuṉṟu poṉ
vēr viṭuppatu pōṉṟaṉa viṇ elām.