கம்பராமாயணம் 5966 · சுந்தர 14.22

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பருதி பற்றிநிமிர்ந்து எழு பைங்கனல் - சூரிய மண்டலத்தை அளாவிஉயர்ந்து எழுந்த அந்தப் புதிய நெருப்பின் வெம்மையால்; எழு கார் மழைமுற்றும் எரிந்து கருகி - வானத்தில் செல்லுகின்ற காள மேகங்கள் முழுவதும்வெந்து கருகி; அருகு சுற்றும் இருந்தை அது ஆய் - பக்கங்களில்சூழ்ந்திருந்த கரியைப் போல விளங்க, ஒள் கதிர் அதின் உருகு பொன்திரள் ஒத்தன - ஒளி தங்கிய சூரியன், அக்கரித்தொகுதியினிடையே உருகுகின்ற பொற் கட்டியைப் போலத் தோன்றினான்.

சூரியனிடத்துஉள்ள நெருப்பினும் வேறுபட்டது அனுமன் இலங்கையில் இட்ட நெருப்பு. அதனால் 'பைங்கனல்' எனப்பட்டது, சென்ற பாடலும், இதுவும் சந்திரன் இருப்பதையும் சூரியன் தோற்றத்தையும் கூறுகின்றன. அதனால் இந்தக் காலம் பௌர்ணமி என்று அறியலாம். அனுமன் சீதாபிராட்டியைப் பார்த்த காலத்தை ஆராய்வதற்கு உதவும் கவிதைகள் இவை இரண்டும் என்னலாம். இருந்தை - கரி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because of the fresh fire that rose up and grasped the sun,
  2. the rain clouds passing by were all burned and charred,
  3. becoming charcoal all around it; in their midst
  4. the bright-rayed sun looked like a lump of melting gold.

What the poem says

The new fire, unlike any fire of the sun's own, rises to the sun and turns the dark clouds around it to charcoal, so that the sun glows in their midst like gold melting in a furnace.

Since the previous verse mentions the moon and this one the sun, the commentary infers that the burning took place at full moon, a clue to the timing of Aṉumaṉ's visit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paruti paṟṟi nimirntu eḻu paiṅ kaṉal
karuki muṟṟum erintu eḻu kār maḻai
aruku cuṟṟum iruntaiyatāy atiṉ
uruku poṉtiraḷ ottaṉaṉ oṇ katir.