கம்பராமாயணம் 5967 · சுந்தர 14.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தளை கொளுத்தியதாவு எரி - (குதிரைகளின் பின்கால்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளை எரித்த மேலே தாவி எழும்பிய தீயானது; தாமணி முளை கொளுத்து - தாமணி என்னும் கழுத்துக் கயிற்றுடன், அக்கயிறு கட்டப்பட்டிருந்த முளைகளையும் எரித்து; முகத்திடை மொய்த்த பேர் உளை கொளுத்த - முகத்தின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபுற மயிர்கள் கொளுத்தப்பட்டு எரிய, (அதனால்); வளைகுளப்பின் மணி நிற வாசி - வளைந்த குளம்பையும் அழகிய நிறத்தையும் உடைய குதிரைகள்; உலந்து உலைவு உற்றன - வாடித்தவித்து அழிந்தன.
தளை - விலங்குபோல் காலில் பூட்டப்படும் கயிறு; தாமணி - கழுத்தில் கட்டும் கயிறு; வளைகுளப்பு - வளைந்த கால் குளம்பு; வாசி - குதிரை. குளம்பு என்பது குளப்பு என வலித்தல் விகாரமாக வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The leaping fire that burned their hobbles burned the neck-ropes and the stakes,
- and set alight the thick manes clustered over their faces;
- they wasted and were destroyed,
- the jewel-hued horses with curving hooves.
What the poem says
In the stables the fire burns through the ropes hobbling the horses' legs, the neck-ropes and the stakes they are tied to, and sets their manes ablaze. The fine horses with curved hooves perish.