கம்பராமாயணம் 5968 · சுந்தர 14.24

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூற்றைவிழுங்குவார் - யமனையும் விழுங்கக்கூடியஆற்றல் அமைந்தசில அரக்கர்கள்; எழுந்து பொன் தலத்து ஏறலின் - (அந்த நெருப்புக்குத்தப்பிப் பிழைக்க மேலே) எழுந்து பொன்னுலகமான சுவர்க்கத்துக்கு ஏறும்போது; நீள் புகை கொழுந்து சுற்ற - கொழுந்துவிட்டு எழுந்த நீண்ட புகைசுற்றிக் கொண்டதனால்; உயிர்ப்பு இலர் - மூச்சுவிட மாட்டாதவர்களாய்; கோளும் உற்று - அப் புகையையும் உள்ளே கொண்டு விட்டபடியால்; அழுந்து பட்டுளர் ஒத்துஅயர்ந்து - நீருள்அழுந்தியவர்களைப் போல மயக்கமுற்றவர்களாகி, ஆர் அழல் விழுந்து முற்றினர் - நீங்குதற்கு அருமையான நெருப்பில் விழுந்து இறந்தனர்

அரக்கர்கள் மேலே எழ முயன்றும், முடியாமல், புகையால் சூழப்பெற்று, அதில் அழுந்தி மயக்கம் அடைந்து, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தனர் என்பதாம். தலம் - இடம், உயிர்ப்பு - மூச்சுவிடுதல்; முற்றினர்- முடிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they rose and climbed toward the golden realm, the long tongues of smoke
  2. wrapped them so that they could not breathe; taking it in,
  3. like the drowned, they fainted, fell into the raging fire
  4. and perished, those who could swallow Death himself.

What the poem says

Some demons, mighty enough to swallow Yama, the god of death, try to fly up toward heaven to escape. The billowing smoke engulfs them; unable to breathe, they faint like drowning men and fall back into the fire to die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu poṉ talattu ēṟaliṉ nīḷ pukaik
koḻuntu cuṟṟa uyirppu ilar; kōḷum uṟṟu
aḻuntupaṭṭuḷar ottu ayarntu ār aḻal
viḻuntu muṟṟiṉar; kūṟṟai viḻuṅkuvār.