கம்பராமாயணம் 5969 · சுந்தர 14.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாசு இழை பரவைபடர் அல்குலார் - பசிய பொன்னாபரணங்களையும் கடல் போலப் பரந்த அல்குலையும் உடையவரான அரக்கமகளிர்கள்; கோசிகம் துகில் உற்ற கொழும் கனல் - அவர்கள் இடையில் உடுத்திய கோசிகம் என்னும் பட்டாடையில் பற்றிய வலி மிகுந்த நெருப்பு; உத்தரிக தூசின் ஓடும் சுற்று உறா - மேலாடையுடனே சூழ்ந்து பற்றிக் கொண்டு; வாசம் மை குழல் பற்ற - நறுமணம் மிகுந்த கரு நிறமான கூந்தலில் பற்றிக்கொள்ளவும்; மயங்கினார் - என்ன செய்வது என்று அறியாது திகைத்து அழிந்தார்கள்.
சில அரக்கியர் அரையாடை நெருப்பினால் சூழப் பெற்று, மேலாடையிலும் பரவிக் கூந்தலிலும் பற்றவே, திகைத்து மயங்கினர் என்பதாம். கோசிகம் - ஒரு வகைப் பட்டு; இது அரையாடை; உத்தரிகம் - மேலாடை, தூசு - பஞ்சினால் ஆகிய ஆடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rich fire that caught their silk garments
- wrapped round with their upper cloths of cotton
- and seized their fragrant dark hair, and they were bewildered,
- the women with fresh gold ornaments and wide hips.
What the poem says
The fire catches the silk waist-cloths of the demon women, spreads to their cotton upper garments and then to their fragrant black hair, and they are helpless and lost.