கம்பராமாயணம் 5999 · சுந்தர 14.55

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாதவம் ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின் வளைந்தான்;
மோதினன்; மோத முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார்.

பொருள் · Meaning in Tamil

மாதிரம் வாலின்வளைத்தான் - எல்லாத் திசைகளையும்தனது வாலினால் வளைத்துக் கொண்ட அனுமன்; பாதவம் ஒன்று பகுத்தான் - ஒருமரத்தைப் பெயர்த்தெடுத்து; மோதினன் - அம்மரத்தால் அரக்கர்களை அடித்தான்; மோத முனிந்தார் - அடித்ததனால் கோபம் கொண்டு வந்தவர்களான அந்த அரக்கர்கள்; ஏதியும் நாளும் இழந்தார் - தமது ஆயுதங்களையும் வாழ்நாளையும் இழந்தார்கள்.

பாதவம் - மரம்;ஏதி - படைக்கலம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He tore up a tree;
  2. he encircled the directions with his tail;
  3. he struck; enraged at the blows,
  4. they lost their weapons and their days.

What the poem says

Aṉumaṉ, his tail curled round every quarter, uproots a tree and lays about him. The demons who come at him in anger lose their weapons and their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pātavam oṉṟu pakuttāṉ;
mātiram vāliṉ vaḷaittāṉ;
mōtiṉaṉ; mōta muṉintār
ētiyum nāḷum iḻantār.