கம்பராமாயணம் 6000 · சுந்தர 14.56

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண் நீர்
சேறு இட ஊரிடு செம்தீ
ஆறிட ஓடினது; ஆறாய்.

பொருள் · Meaning in Tamil

மாருதி நூறிடநொந்தார்- அனுமன் அவ்வாறு அடிக்க வருந்தினவர்களான அரக்கர்கள்; ஊறு இட ஊன் இடு புண்ணீர் சேறு இட - காயம் அடைய அதனால், அவர் உடம்பினின்றும் பெருகிய இரத்தமானது, சேற்றை உண்டாக்க; ஊர் அடு செந்தீ ஆறிட ஆறாம் ஓடினது - அவ்வூரை எரித்த சிவந்த நெருப்பு தணியும் படி ஆறாகப் பெருகிற்று.

அனுமனால்மோதுண்ட அரக்கரின் இரத்தப் பெருக்கு பற்றிக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those whom the Wind's son crushed were wounded;
  2. as the blood pouring from their wounded flesh made mire,
  3. it ran as a river,
  4. enough to quench the red fire that destroyed the city.

What the poem says

So many demons are wounded by Aṉumaṉ that their blood turns the ground to mud and runs like a river, enough to put out the fire that was burning the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟiṭa māruti nontār
ūṟiṭa ūṉ iṭu puṇṇīr
cēṟu iṭa ūr aṭu centī
āṟiṭa ōṭiṉatu; āṟām.