கம்பராமாயணம் 6001 · சுந்தர 14.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோற்றினர் துஞ்சினர் அல்லால்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்;
காற்றின் மகன் கலை கற்றான்
கூற்றினும் மும்மடி கொன்றான்.
பொருள் · Meaning in Tamil
துஞ்சினர்அல்லோர் தோற்றினர் ஏறு இகல்வீரர் - இறந்தவர்கள் போக அங்குத் தென்பட்டவர்களான ஆண்சிங்கம் போன்ற வீரர்கள்; எதிர்ந்தார் - அனுமனை எதிர்த்தார்கள்; காற்றின் மகன் கலை கற்றான் - வாயு தேவன் மகனும் எல்லாக்கலைகளையும் கற்றவனுமாகிய அனுமன்; கூற்றினும் மும்மடி கொன்றான் - யமனைவிட மூன்று மடங்கு அவர்களைக் கொன்றுவிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who appeared, all who were not dead,
- heroes eager for battle, faced him;
- the Wind's son, master of all learning,
- killed three times more than Death himself.
What the poem says
The surviving demon champions come forward to fight, and Aṉumaṉ, son of the Wind and master of every art, kills them in numbers three times greater than Yama, god of death, could manage.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṟṟiṉar tuñciṉar allār
ēṟṟu ikal vīrar etirntār;
kāṟṟiṉ makaṉ kalai kaṟṟāṉ
kūṟṟiṉum mummaṭi koṉṟāṉ.