கம்பராமாயணம் 600 · பால 10.48

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மலை மிசைத் தடம் அத்து உகு மழை கண் ஆலி போல்,
முலை முகட்டு உதிர்ந்திடும் நெடுங் கண் முத்து இனம்,
சிலை நுதல் கடை உறை செறித்த வேல் கணாள்
உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்த ஏ.

பொருள் · Meaning in Tamil

சிலை நுதற் கடை - வில் போன்ற நுதலின் கடைப்பால் புருவ விளிம்பில்; உறை செறிந்த - பொருந்திய துளிர்த்த மிக்க; வேர்வு - வியர்வைத்துளிகள்; தன் - அவளது; உலை முகப்புகை - கொல்லன் உலைக்களத்து எழும்புகை போன்ற வெப்பம்; நிமிர் உயிர்ப்பின் - நெட்டுயிர்ப்பினால்; மாய்ந்ததே - புலர்ந்து (உலர்ந்து) போயிற்று; மலை முகட்டு இடத்து - மலைச் சிகரங்களின் மேற்பால்; உகு - சிந்துகின்ற, பொழிகின்ற; ஆலிபோல் - மழைத்துளிகள் போல; முலை முகட்டு - அவளது தடங்கொங்கைகளின் மேற்பால்; நெடுங் கண் - நீண்ட கண்கள் பெருக்கிய; முத்து இனம் - முத்து போன்ற கண்ணீர்த் துளிகள்; உதிர்ந்தன - சிந்தின.

வான்கண் விழித்த (மேகம் பொழிந்து நீர்த்துளிகள் மலைச் சிகரத்தில் வீழ்தல்போல் மான்கண் இழித்த முத்து போன்ற நீர்த்துளிகள் மலைச் சிகரங்களில் வீழ்ந்தன.

வியர்வைத்துளிகள் நெட்டுயிர்ப்பால் உலர்ந்து போயின என்பது குறிப்பு. மழைக்கண் காரணக்குறி என்பார் சுந்தர காண்டத்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like hailstones falling from the rain cloud onto the crest of a mountain,
  2. the pearl-like tears of her long eyes dropped onto the crest of her breasts;
  3. and the sweat gathered thick at the edge of her bow-curved brow
  4. vanished in her long sighs, hot as the smoke from a forge's mouth.

What the poem says

Cītai weeps. Her tears fall like pearls onto her breasts, as hailstones from a rain cloud fall on mountain peaks. Sweat beads at the edge of her brows, but her long, burning sighs, hot as the blast from a blacksmith's forge, dry it at once. Her eyes are called "rain-eyes," a name the commentary says fits because they really do rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaimukaṭṭu iṭattu uku maḻaikkaṇ āli pōl,
mulai mukaṭṭu utirntaṉa neṭuṅ kaṇ muttu iṉam,
cilai nutaṟkaṭai uṟai ceṟinta vērvu taṉ
ulai mukap pukai nimir uyirppiṉ māyntatē.