கம்பராமாயணம் 601 · பால 10.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கம்பம் இல்- கலக்கம் இல்லாத; கொடு மனம் - வலிய மனத்தையுடைய; கானவேடன் - காட்டில் வாழும் வேடனது; கை அம்பொடு - கையால் எய்யப்பட்ட அம்பினால்; சோர்வது ஓர் மயிலும் - தளர்ந்து விழுவதோர் மயில் பறவையை; அன்னவள் - ஒத்தவளான சீதை; வெம்புறு மனத்து - கொதிக்கின்ற தன் மனத்தில் உண்டான; அனல் வெதுப்ப - காமத்தீ எரிப்பதால்; மென்மலர்க் கொம்பு என - (அனல்பட்ட அளவில் எரிக்கப்பட்ட) பூங்கொம்பு போல; அமளியில் - அம் மலர்ப்படுக்கையில்; குழைந்து - வாடி; சாய்ந்தனள் - சாய்ந்தாள்.
வேடனது அம்பால் எய்யப்பட்ட மயிலானது தளர்ந்து வீழ்வது போலச் சீதை மன்மதனது மலர்க் கணையால் அடிப்பட்டுச் சோர்ந்து வீழ்ந்தாள். கம்பம்: சலனம், நிலை மாறுதல். அம்பொடு: ஒடு - கருவிப் பொருளில் வந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a peacock sinking with the arrow from the hand of the hunter Kāma, whose cruel heart never wavers,
- was she;
- and as the fire in her seething heart scorched her, like a soft flowering branch
- she wilted and sank down upon the bed.
What the poem says
Cītai collapses on the flower bed like a peacock shot by a pitiless hunter, here Kāma with his flower-arrows. The fire in her heart scorches her until she wilts like a flowering branch held to a flame.