கம்பராமாயணம் 602 · பால 10.50

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொரிந்தன நறுமலர் சுறுக்கொண்டு ஏறின,
பொரிந்தன கலவைகள் பொறியின் சிந்தின,
எரிந்தன கனல் சுட இழையில் கோத்த நூல்
பரிந்தன, கரிந்தன பல்லவங்கள் ஏ.

பொருள் · Meaning in Tamil

(அப்பொழுது) சொரிந்தன - படுக்கையில் பரப்பிய; நறுமலர் - மணமுள்ள மலர்கள்; சுறுக்குண்டு ஏறின - (அவளுக்கு மென்மை செய்யாமல்) கூர்மையாகித் (உடம்பில்) தைத்தன; பொரிந்தன கலவைகள் - (அவளது உடம்பின் காமத் தீயால்) பொரிந்து போன கலவைச் சந்தனங்கள்; பொரியின் - சிந்தின தீப்பொறிகள் போல உதிர்ந்தன; எரிந்த வெங் கனல் சுட - (அவளது உடம்பில் பற்றி) எரிகிற காமத்தீயானது சுடுவதால்; இழையில் கோத்த - அணிகலன்களில் கோக்கப்பட்டுள்ள; நூல் பரிந்தன - நூல்கள் அறுபட்டு நீங்கின; பல்லவங்கள் - (படுக்கையில் பரப்பப்பட்ட) தளிர்கள்; கரிந்தன - கரிந்து போயின.

சுறுக் கொள்ளுதல் தீய்ந்து சுருளுதல்; கூர்மையை அடைதல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fragrant flowers strewn there turned sharp and pierced her;
  2. the sandal pastes, parched dry, flaked off like sparks;
  3. as the blazing fire burned, the threads strung through her ornaments
  4. snapped; and the tender shoots were charred.

What the poem says

The heat of Cītai's love-fever is so fierce that everything meant to cool her is ruined. The soft flowers shrivel and prickle like thorns. The cooling sandal paste on her body dries and flakes off like sparks. The threads holding her jewels burn through, and the fresh shoots of her bed are scorched black.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1corintaṉa naṟu malar cuṟuk koṇṭu ēṟiṉa,
porintaṉa kalavaikaḷ poṟiyiṉ cintiṉa,
erinta veṅ kaṉal cuṭa iḻaiyil kōtta nūl
parintaṉa, karintaṉa pallavaṅkaḷē.