கம்பராமாயணம் 603 · பால 10.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(சீதையின் தாதியர் - பணிப் பெண்களும்; செவிலியர் - செவிலியர்களும்; தாயர் - ஐந்துவகைத் தாய்மார்களும்; தவ்வையர் - தமக்கை முறையினரும்; மாதுயர் உழந்து உழந்து - (சீதை அடைந்த நோயால்) கடுந் துன்பத்தை மிக அடைந்து; அழுங்கி - பெரிதும் வருந்தி; மாழ்கினர் - மனம் கலங்கியவர்களாகியும்; இது யாது கொல்என - இந்த நோய் எந்த நோயோ என; எண்ணல் தேற்றலர் - ஆலோசித்து அறியமாட்டாதவர்களாகியும்; போதுடன் அயினிநீர்- பல பூக்களோடு கூடிய ஆலத்தி நீரை; சுழற்றிப் போற்றினர் - சுற்றி (அவளுக்குக் கண்ணூறு கழித்து) வாழ்த்தினார்கள்.
சீதையின் காமநோயை அறியாமல் தோழியர் முதலோர் கண்ணூறெனக் கருதி அதற்குப் பரிகாரம் தேடினர்; அயினிநீர்: செஞ்சோற்றுடன் கூடிய நீர் கண்ணூறு அச்சம் ஆகியவற்றால் உண்டாகிய குற்றம் களைவது.
தாயர் ஐவர்: 1. ஆட்டுவாள் 2. ஊட்டுவாள் 3. ஒல் உறுத்துவாள் 4. நொடி பயிற்றுவாள் 5. கைத்தாய். செவிலியர்: வளர்க்கும் தாயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her maids, her foster-mothers, her mothers and her elder sisters,
- suffering great grief again and again, sorrowed and despaired;
- unable to work out 'What can this be?',
- they waved water with flowers in it round her, and blessed her.
What the poem says
The women who look after Cītai, her maids, foster-mothers, the five kinds of "mothers" who raise a princess, and her elder sisters, are frightened and have no idea what is wrong. They decide she has been struck by the evil eye. To ward it off they wave a vessel of water mixed with flowers and red rice round her and bless her.