கம்பராமாயணம் 604 · பால 10.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருகில் நின்று- பக்கத்திலே இருந்து; அசைக்கின்ற ஆலவட்டம் - (தோழியர்) வீசுகின்ற ஆலவட்டங்களின்; கால் எரியினை மிகுத்திட - காற்றானது காமத் தீயை வளர்க்க; இழையும் மாலையும் - (சீதையணிந்த) அணிகளும் பூமாலைகளும்; கரிகுவ - கரிந்தும்; தீகுவ- தீய்ந்தும்; கனல்வ - எரிந்தும்; காட்டலால் - ஆகிவிட்டமையால்; உருகுபொன் பாவையும் - (நெருப்பில் உருகுகின்ற பொன்னாலாகிய பாவையை; ஒத்து - போன்று; தோன்றினாள் - காணப்பட்டாள்.
அணி: தற்குறிப்பேற்ற அணி. அணிந்த அணிகள், மாலைகள் காமத் தீயால் கருகியும் தீய்ந்தும் எரிந்தும் போயின; தவிர, அச்சீதையும் நெருப்பில் உருகும் பொற்பாவைபோல் ஆகிவிட்டாள். ஆலவட்டம்: பெருவிசிறி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the breeze from the great fans waved by those who stood near
- only fanned the fire higher, her ornaments and garlands
- were seen to char, to scorch and to glow;
- and she looked like a golden doll melting.
What the poem says
Her companions fan her with large palm fans, but the breeze only feeds the fire, as wind does with real flames. Her jewels and garlands blacken and smoulder, and Cītai herself looks like a golden figure melting in a furnace.