கம்பராமாயணம் 605 · பால 10.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சீதை) அல்லினை வகுத்தது - இருளைக் கொண்டு; ஓர்அலங்கல் காடு - அமைக்கப்பட்ட பூமாலைகள் உள்ள காடு (இராமனதுமுடி); என்னும் - என்று சொல்வாள்; இருபுயம் - அவனுடைய இரண்டு தோள்களும்; வல் எழு - வலிய தூண்களாம்; அல்லவேல் - அவை இல்லாவிட்டால்; மரகதப் பெருங்கல் - மரகதக் கற்கள் மயமான பெருமலைகளே; எனும் - என்பாள்; கண் கமலம் எனும் - (அவனுடைய) கண்கள் செந்தாமரை மலர் என்பாள்; வில்லொடும் இழிந்தது - (அவனது திருமேனி) இந்திரவில்லுடன் வானத்திலிருந்து இறங்கிய; ஓர்மேகம் என்னும் - ஒரு மேகம் என்று சொல்வாள்.
இராமனிடம் தன்மனம் செல்லப் பெற்ற சீதை அவனைக் குறித்து வாய் பிதற்றுவதாகும். அல் வகுத்ததோர் காடு: குடுமியின் கருமையும், மயிர்களின் அடர்த்தியும் கருதியது. எழு - இரும்புத்தூண்: தோள்கள் திரண்டு உருண்டு நீண்டிருத்தலால் தோளுக்கு இரும்புத் தூண் உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'A grove of garlands fashioned out of darkness,' she says;
- 'mighty pillars — or else great emerald
- rocks — his two shoulders'; 'his eyes, lotuses,' she says;
- 'a cloud come down with a rainbow,' she says.
What the poem says
Lost in longing, Cītai talks to herself about the stranger she saw. His dark hair, thick and garlanded, is a grove made of night. His shoulders are iron pillars, or great emerald rocks. His eyes are lotuses. His whole dark body is a rain cloud come down to earth carrying a rainbow, which is his bow.