கம்பராமாயணம் 606 · பால 10.54

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெருக்கி உள்புகுந்து - (என் மனத்துள்ளே) நெருக்கிப் புகுந்து; அருநிறையும் - அழிக்க முடியாத என் மன உறுதியையும்; பெண்மையும் - (நாணம் முதலிய பிற) பெண்மைக் குணங்களையும்; உருக்கி - இளகச் செய்து; என் உயிரொடும் - (அவற்றை) எனது உயிருடன்; உண்டு போனவன் - கவர்ந்து சென்ற உத்தமன்; (மன்மதனோ என்றால்); பொருப்பு உறழ்தோள் - மலைபோன்ற தோளிலே; புணர் புண்ணியத்தது - சேர்ந்த நல்வினையுடையது; கருப்பு வில் அன்று - கரும்பு வில் அன்று (ஆதலால்); அவன் காமன் அல்லனே - அவன் மன்மதன் இல்லை.

இராமனது அழகிலே மயங்கிய சீதை இவன் மன்மதனோ என ஐயுற்றாள். பின் கையில் கரும்பு வில் இல்லாமல் மூங்கில் வில்லையே வைத்திருந்ததால் இவன் காமன் இல்லை என்று தெளிந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He pressed his way in, entered within, melted my hard-won restraint and my womanliness,
  2. and went off, consuming them along with my life;
  3. yet the fortunate thing that rests on his mountain-like shoulder
  4. is no sugarcane bow — so he is not Kāma.'

What the poem says

Cītai goes on talking to herself. The stranger forced his way into her heart, melted her self-control and modesty, and carried them off along with her life. She wonders if he was Kāma, the god of love, who does exactly that. But the bow on his shoulder was not Kāma's bow of sugarcane, so he cannot be Kāma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nerukki, uḷ pukuntu, aru niṟaiyum peṇmaiyum
urukki, eṉ uyiroṭu uṇṭu, pōṉavaṉ,
poruppu uṟaḻ tōḷ puṇar puṇṇiyattatu,
karuppu vil aṉṟu; avaṉ kāmaṉ allaṉē.