கம்பராமாயணம் 6003 · சுந்தர 14.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோய்த்தனன் வால் அது தோயக்
காய்த்திய வேலை கலந்தார்
போய்த்திலர் பொன்றினர் போனார்
ஏய்த்து என மைந்தர் எதிர்ந்தார்.
பொருள் · Meaning in Tamil
வால்தோய்த்தனன் - அனுமன் தனது வாலைக்கடலில் தோய்த்தான்; அது தோய - (நெருப்பு பிடித்த) அந்த வாலைத் தோய்த்ததினால்; காய்ச்சின வேலை போய் கலந்தார் சிலர் - கொதிப்படைந்த கடலில் சென்று முழுகியவர்களில் சிலர்; பொன்றினர் போனார் மைந்தர் - இறந்தொழிந்தார்கள் (சில இறவாது நின்ற) வீரர்கள்; ஏச்சு என - (இவ்வாறு கடலில் மூழ்குவது) நமக்கு இழிவு என்று கருதி; எதிர்ந்தார்- அனுமனை எதிர்த்தார்கள்.
மைந்தர்-வலிமை உடையவர்: வீரர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He dipped his tail; as it was dipped,
- some who had gone into the heated sea
- perished and were gone; the strong ones, thinking it a disgrace,
- came to face him.
What the poem says
Aṉumaṉ dips his burning tail in the sea, which grows so hot that some of the demons who fled into it die. The bravest survivors, ashamed to hide in the water, come back to fight him.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōyttaṉaṉ vāl atu tōyak
kāycciṉa vēlai kalantār
pōyc cilar poṉṟiṉar pōṉār
ēccu eṉa maintar etirntār.