கம்பராமாயணம் 6004 · சுந்தர 14.60

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுற்றின தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்
எற்றினன் மாருதி எற்ற
உற்று எழு வீரர் உலைந்தார்.

பொருள் · Meaning in Tamil

சுற்றின தேரினர்- அனுமனைச் சூழ்ந்து கொண்ட தேர் ஏறிய வீரர்கள்; தோலா வில் தொழில் வீரம் விளைத்தார் - தோல்வி அடையாத தம்விற்போர்த் தொழிலில் வீரத்தைக் காட்டிப் போர் செய்தார்கள்; மாருதி எற்றினன் - அனுமன் அவர்களைத் தாக்கிஅடித்தான்; எற்ற - அவ்வாறு தாக்கியதனால்; உற்று எழுவோரும் உலந்தார்- அடிபட்டு பொர முனைந்து எழுந்த வீரர்களும் அழிந்தார்கள். “எழுவோர்' - ஏழுவீரர்கள் என்றும், இவர்கள் அமைச்சர்களின் மக்கள் என்றும் பொருள் விளக்கம் கொடுக்கலாம். 51-ம் பாடலில் ஓர் எழு வீரர் உயர்ந்தார் ? என்ற தொடரை நோக்கும் போது எழுவோர் ? என்பதற்கு ஏழுவீரர்கள் எனப் பொருள் கொள்வது பொருத்தமே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chariot fighters who surrounded him
  2. showed the valour of their unbeaten archery;
  3. the Wind's son struck them, and as he struck,
  4. even the seven who rose to fight perished.

What the poem says

The chariot warriors close in and fight with their famed archery, but Aṉumaṉ strikes them down. Among the dead are the seven champions mentioned a few verses earlier; one reading takes them to be the sons of Irāvaṇaṉ's ministers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟiṉa tēriṉar tōlā
vil toḻil vīram viḷaittār
eṟṟiṉaṉ māruti eṟṟa
uṟṟu eḻuvōrum ulantār.