கம்பராமாயணம் 608 · பால 10.56

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திர நீலம் ஒத்து - இந்திர நீலம் என்ற மணிக்கு ஒப்பாக, இருண்ட குஞ்சியும் - கறுத்த மயிர்முடியும்; சந்திர வதனமும் - முழுநிலவு போன்ற முகமும்; தாழ்ந்த கைகளும் - (முழங்கால் வரை தொங்கும் கைகளும்; சுந்தர மணிவரை - அழகிய நீலமணிமலைகள் போன்ற - தோளுமே - தோள்களும் என்னும் இவையே; அல- அல்ல (அவ்வாறாயின் பின் யாது என்றால்); அம் முறுவல் - அந்தப் புன்னகைதான்; முந்தி - (இவை எல்லாவற்றுக்கும்) முற்பட்டு; என் உயிரை உண்டது - எனது உயிரைக் கவர்ந்தது.

முறுவல்: மகிழ்ச்சிக் குறிப்பு. இந்திர நீலம்: சிறந்த சாதி நீல மணி. என் காதலனுடைய குஞ்சி முதலியன என் உயிரை உண்டன என்றாலும் முற்பட்டு உயிரை உண்டது அவனது புன்முறுவலே என்று வருந்திக் கூறுகிறாள் சீதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Not his hair, dark as the indra-nīla sapphire,
  2. nor his moon-like face, nor his long arms reaching down,
  3. nor his shoulders like beautiful jewelled hills —
  4. before all of these, it was that smile of his that consumed my life.'

What the poem says

Cītai goes over his beauty: hair dark as the finest sapphire, a face like the full moon, arms reaching to his knees (a mark of a great man), shoulders like jewelled mountains. Every one of these took her heart, but what took it first was his smile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intira nīlam ottu iruṇṭa kuñciyum,
cantira vataṉamum, tāḻnta kaikaḷum,
cuntara maṇi varait tōḷumē ala,
munti eṉ uyirai am muṟuval uṇṭatē.