கம்பராமாயணம் 609 · பால 10.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படர்ந்து ஒளிபரந்து - அகன்ற ஒளி பரந்து; உயிர் பருகும் - காண்போர் உயிரைப் பருகக் கூடிய; ஆகமும் - அவனது திருமார்பும்; தடம் தரு - பெருமை மிக்க; தாமரைத் தாளுமே - செந்தாமரை போன்ற திருவடிகளும் என்னும்; அல - இவையே அல்ல; கடம்தரு மாமதம் - கன்னத்திலிருந்து வழியும் மிக்க மதநீரையும்; களி நல்யானை போல் - களிப்பையும் உடைய சிறந்த ஆண் யானை போல; நடந்தது - (அந்த இளைஞன்) நடந்துசென்ற நடையழகு; என் உள்ளம் நண்ணி - என் மனத்தில் பொருந்தி; கிடந்தது - (எப்பொழுதும் நீங்காது) பதிந்துள்ளது.
சீதை இராமனது மார்பின் அழகு, தாமரைத் திருவடிகளின் அழகு என்ற இவற்றைவிட அவனது நடையழகில் தன் மனம் பதிந்தமையைத் தெரிவிக்கின்றாள். தடம் தரு தாமரை: தடாகத்தில் பூத்த தாமரை என்றும் கூறலாம். பறிக்கப்பட்டு வாடிப் போகாத அன்று பூத்த மலர் எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Not his chest, whose broad light spreads out and drinks up the lives of those who see it,
- nor his feet like lotuses fresh from the pool —
- it was the way he walked, like a fine elephant in joyous rut, must streaming from its cheeks,
- that has come and settled in my heart and lies there.'
What the poem says
Even more than his broad, shining chest or his lotus-like feet, it is Irāmaṉ's walk that Cītai cannot forget. He moved with the stately, easy stride of a noble bull elephant, and the picture of it has settled in her heart for good. The lotuses "of the pool" are fresh ones, not picked and wilting.