கம்பராமாயணம் 610 · பால 10.58

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரை செயின் - (அவ் ஆண்மகனை இன்னான் என்று) சொல்லப் புகுந்தால்; தேவர்தம் உலகு - தேவர் உலகத்தில்; உளான் அலன் - உள்ள ஒரு விண்ணவன் அல்லன்; விரைசெறி தாமரை - (ஏனெனில்) மணமுள்ள செந்தாமரை போலும்; இமைக்கும் மெய்ம்மையான் - கண்கள் இமைக்கும் தன்மையுடையவன்; வரிசிலை தடக்கையன் - கட்டமைந்த வில்லை ஏந்திய பெரிய கையையுடையவன்; மார்பின் நூலினன் - மார்பில் பூணூல் தரித்தவன் (அவன்; அரசு இளங்குமரனே - இளம்பருவமுடைய அரச குமாரனாகவே; ஆகல் வேண்டும் - இருத்தல் வேண்டும்.

அவனை முதலில் தேவனோ என்று ஐயப்பட்டவள் கண்ணிமைத்தலால் அந்த ஐயம் நீங்கினாள். பின் கைவில்லும், மார்பின் நூலும் கண்டமையால் 'அரசகுமாரனே அவன்' என்று தெளிந்தாள். அணி: ஐயவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If I am to say who he is: he is not one who lives in the world of the gods,
  2. for his eyes, like fragrant lotuses, blink as mortal eyes do;
  3. with a banded bow in his great hand and the sacred thread across his chest,
  4. he must be a young prince.'

What the poem says

Cītai works out who the stranger might be. Was he a god? No, because gods never blink and his eyes did. He carried a bow and wore the sacred thread, so he must belong to the warrior class. He must be a young prince. The commentary calls this the figure of doubt, where a speaker weighs possibilities before settling on an answer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uraiceyiṉ tēvartam ulaku uḷāṉ alaṉ,
viraiceṟi tāmarai imaikkum meymmaiyāṉ,
vari cilait taṭak kaiyaṉ, mārpiṉ nūliṉaṉ,
araciḷaṅ kumaraṉē ākalvēṇṭumāl.