கம்பராமாயணம் 611 · பால 10.59

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறந்த உடை - (என்) உடன் பிறந்து எனக்கு உடைமையாயுள்ள; நலம்நிறை - நல்ல மனவுறுதி ஆகிய; பிணித்த எந்திரம் - கட்டமைந்த இயந்திரம், கறங்குபு திரியும் - சுழன்று திரிதற்கு இடமான; என் கன்னி மாமதில் - (காவல் புரியும்) மதிலின் மேல் பொருத்தப்பெற்றுப் பிறரை அணுகவிடாது காக்கும் எனது கன்னித் தன்மையாகிய பெரிய மதிலை; எறிந்த - அழித்துச் சென்ற; அக்குமரனை - அந்தக் குமரனை; இன்னும் - மற்றொருமுறை; கண்ணில் கண்டு - கண்களால் கண்டு; அறிந்து - அவனை (இன்னான் இத்தகையவன் என) அறிந்து; உயிர் இழக்கவும் - (அதன் பின்பு) எனது உயிரை இழக்கவாயினும்; ஆகுமே கொல் ஆம் - கூடுமோ?

கன்னிமை மனத்துள்ளே ஓர் ஆடவனும் செல்லமுடியாதபடி காத்து வருதலால் அதனை 'மதில்' என்றார்; நிறை அந்தக் கன்னிமைக்கும் காவலாய் நின்று உறுதி தருவதால் அதனை 'எந்திரம்' என்றார். உருவகம்: 'காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்ந்த கதவு' (குறள்: 1251). அந்தக் குமரனைக் கண்டு அவனை அணைய முடியாது போயினும் இன்னான் இனையான் என அறிய இயலுமா? நானோ காம தேவனைப் பட்டு உயிர்துறப்பது உறுதி; ஆனால் அவனை என் கண்களால் கண்டு களித்தால் அதன்பின் என் உயிர் போவதாயினும் போகுக. அதுவும் எனது பேறே. இயந்திரம் மதில் உறுப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My maidenhood is a great wall, where restraint, born with me, whirls like a war-engine fixed upon it;
  2. that youth has broken it down;
  3. could I but see him once more with my own eyes
  4. and know who he is — even if I must lose my life after?'

What the poem says

Cītai pictures her maidenhood as a fortress wall that no man could get past, guarded by her self-restraint like the revolving war-engines mounted on ancient ramparts. The young prince has knocked it all down at a single glance. Her one wish is to see him again and learn who he is, and after that she would not mind dying. The commentary compares a Tirukkuṟaḷ couplet in which the axe of desire breaks down the door of modesty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṟantuṭai nalam niṟai piṇitta entiram
kaṟaṅkupu tiriyum eṉ kaṉṉi mā matil,
eṟinta ak kumaraṉai, iṉṉum kaṇṇiṟ kaṇṭu,
aṟintu, uyir iḻakkavum ākumēkolām.