கம்பராமாயணம் 6112 · யுத்த 1.11

Section யுத்த காண்டம் / 1. கடல் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு
தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்.

பொருள் · Meaning in Tamil

இராமன் - இராமபிரான்; இன்னது ஆய கருங்கடலை எய்தி - இத்தகைய பெரிய தென்கடலை அடைந்து; தன்னது ஆய நெடுமானம் -தனக்கே உரிய பெரிய மானமும்; துயரம் காதல் இவை - துன்பமும், காதல் உணர்வும் ஆகிய இவை; இதனுக்கு ஏழு மடங்கு தழைப்ப - அந்தக் கடலை விட ஏழுமடங்கு வளர; மேல் விளைவு என்னதாகும்? - மேல் நடைபெற இருக்கும் செயல் என்ன தன்மைத்தாகும்; என்று நினைந்து இருந்தான் - என்று எண்ணியவனாய் கடற்கரையில் தங்கி இருந்தான்; இகல் இலங்கை - பகைவர் வாழுமிடமாகிய இலங்கையில்; பின்னது ஆய காரியமும் - அனுமன் போய் வந்தபின் நிகழ்ந்த காரியங்களையும்; நிகழ்ந்த பொருளும் பேசுவாம் - அதனால் நிகழ்ந்த பயன்களையும் இனிப் பேசுவோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having reached the dark sea of this kind, with his great pride, his sorrow and his love,
  2. which were his own, swelling to seven times its size,
  3. Irāmaṉ waited, thinking, What will come of it next? Now of hostile Ilaṅkai,
  4. we shall tell what was done afterward and what came of it.

What the poem says

Irāmaṉ camps on the shore, his pride, grief and love grown seven times greater than the ocean itself, wondering what will happen next. The poet then turns the story to Ilaṅkai, to tell what happened there after Aṉumaṉ's visit. This closes the canto Seeing the Sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉatu āya karuṅ kaṭalai eyti itaṉukku eḻu maṭaṅku
taṉṉatu āya neṭu māṉam tuyaram kātal ivai taḻaippa
eṉṉatu ākum mēl viḷaivu? eṉṟu iruntāṉ irāmaṉ; ikal ilaṅkaip
piṉṉatu āya kāriyamum nikaḻnta poruḷum pēcuvām.