கம்பராமாயணம் 6113 · யுத்த 2.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூவரும் அயனொடும் புகுந்து - இராவணன், திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனோடும் இலங்கை நகருள் புகுந்து பிரமனைப் பார்த்து; பொன்னகர் - அழகிய நகரமாகிய இலங்கையை; மூவகை உலகினும் - மூன்று உலகங்களிலும் உள்ள நகரங்களைவிட; அழகு முற்றுற - சிறந்த அழகு முழுதும் பொருந்துமாறு அமைய; ஏவு என- கட்டளை இடுவாயாக என்று கூற அந்தப் பிரம தேவன் கட்டளைப்படி; தெய்வத்தச்சன்- தெய்வ உலகின் தச்சனாகிய மயன்; தேவரும் மருள் கொள- தேவர்களும் பார்த்து மயங்கும்படி; கணத்தின் - நொடிப் பொழுதுக்குள்; இயற்றினன் என்பர் - இலங்கையைச் செய்தமைத்தான் என்பார்கள்.
'மன்னன் அயனொடும் புகுந்து மன்னன் - இராவணன். அடுத்த பாட்டிலிருந்து கொள்ளப்பட்டது. மூவகை உலகு- விண்ணுலகு, மண்ணுலகு, கீழ்உலகு என்பனவாம். முற்றுற-முற்றும் உற என்பதன் உம்மை தொக்கது. நிரம்ப என்றுமாம். வான்மீகத்தில் இலங்கையை மீண்டும் அமைத்தது கூறப்படவில்லை. நினைத்த நினைப்பால் படைத்தல் வல்லவன் தெய்வதச்சன் என்பதால் 'கணத்தின் இயற்றினன்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Entering with Ayaṉ, who came from the flower, he said, Command that this golden city
- be made complete in beauty beyond all three kinds of worlds;
- and in an instant, they say, he built it,
- so that even the gods were bewildered, the divine architect.
What the poem says
The canto of Irāvaṇaṉ's Council opens in Ilaṅkai, which Aṉumaṉ had burned. Irāvaṇaṉ enters the city with Ayaṉ, the creator Piramaṉ born from the lotus, and asks him to have it rebuilt more beautiful than any city in heaven, earth or the underworld. At Piramaṉ's word, Mayaṉ, the architect of the gods, rebuilds it in a moment, to the gods' amazement.
The commentary notes that Vālmīki does not mention this rebuilding.