கம்பராமாயணம் 6114 · யுத்த 2.2

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினான் நாக நோக்கினான்
'முன்னையின் அழகு உடைத்து'என்று மொய்கழல்
மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

பொருள் · Meaning in Tamil

மொய்கழல் மன்னன் - வீரக்கழலணிந்த இராவணன்; பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை - பொன்னாலும் மணிகளாலும் அமைக்கப்பட்ட அழகுடைய; நல்நகர் நோக்கினான் - நல்ல நகராகிய இலங்கையைப் பார்த்தான்; நாகம் நோக்கினான் - தேவர் தலைநகராகிய அமராவதியைப் பார்த்தான்; முன்னையின் அழகுடைத்து - முன்பிருந்ததை விடவும் அழகுடையதாய் அமைந்துள்ளது; என்று உவந்து - என்று கூறி மகிழ்ந்து; தன் முனிவு மாறினான் - கோபம் நீங்கினான்;

மொய்கழல் - கால்களில் செறிந்த வீரக்கழல். "மன்னனும் நகர் நோக்கினான் முனிவு மாறினான்” என இயையும். முனிவு- அனுமன் இலங்கையை எரித்ததால் எழுந்த கோபம். நாகம்- விண்ணுலகம் இங்கு ஆகுபெயராய் அமராவதியை உணர்த்தியது. 'நாகம் நோக்கினான் நல்நகர் நோக்கினான் என்றது அமராவதியை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதனிலும் இலங்கை அழகு மிக்கது என்று அறிந்து மகிழ்ந்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Upon the good city, beautiful, made of gold and of gems,
  2. he looked, and he looked at the heaven of the gods,
  3. and saying, It is lovelier than before, the king of the strong war-anklets
  4. rejoiced and let go of his anger.

What the poem says

Irāvaṇaṉ compares the rebuilt Ilaṅkai with Amarāvatī, the capital of the gods in heaven, and finds his own city more beautiful than it was before. Pleased, he lets go of the anger he has felt since Aṉumaṉ set it on fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉṉiṉum maṇiyiṉum amainta poṟpuṭai
nal nakar nōkkiṉāṉ nākam nōkkiṉāṉ
'muṉṉaiyiṉ aḻaku uṭaittu' eṉṟu moy kaḻal
maṉṉaṉum uvantu taṉ muṉivu māṟiṉāṉ.