கம்பராமாயணம் 6115 · யுத்த 2.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முழுப்பெரும் தனி முதல் - முழுமையான பெரிய ஒப்பற்ற தலைவனும்; உலகின் முந்தையோன் - உலகம் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவனுமான பிரமதேவன்; எழிற்குறி காட்டி நின்று - அழகுக்குரிய நெறி முறைகளை மயனுக்குக் காட்டி நின்று; இயற்றி ஈந்தனன் - அந்த மயனால் இலங்கையை அழகுற அமைக்கச் செய்து தந்தான்; பழிப்பரும் உலகங்கள் எவையும் - பழித்தற்கரிய உலகங்கள் எல்லாவற்றையும்; பன்முறை அழித்து அழித்து ஆக்குவாற்கு - பல முறையும் அழித்துப் படைக்கும் திறமுடைய பிரமனுக்கு; அரிது உண்டாகுமோ? - செய்தற்கு அரிய செயல் எதுவும் உண்டோ? (இல்லை என்பது கருத்து)
உலகங்கள் எல்லாவற்றையும் படைப்பவன் ஆதலால் 'முழுப் பெரும் தனிமுதல்' என்றார். உலகம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியவன் என்பதால் 'உலகின் முந்தையோன்' என, பிரமனைச் சிறப்பித்தார். எழிற்குறி-அழகுக்குரிய வரையறை. இலங்கை எழிலுக்குக் காரணம் உலகின் முந்தையோனான பிரமனே மயனுக்கு எழிற் குறிகாட்டி இயற்றச் செய்ததே. இப்பாடலைக் கவிக்கூற்று என்பர்; இராவணன் கூற்று எனினும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one whole, great, peerless first one, the most ancient of the world,
- stood showing the marks of beauty and had it made and gave it;
- for him who, again and again, has destroyed and destroyed and made
- all the faultless worlds, could anything be hard?
What the poem says
The rebuilt city's beauty is credited to Piramaṉ, who stood by and showed Mayaṉ the canons of beauty. For the creator who has made and unmade the worlds countless times, nothing is difficult. The verse may be the poet's comment or Irāvaṇaṉ's own words.